பாலத்தீனத்தின் தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க 57 இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாலத்தீன நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும் என 57 இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் “முடிவு செல்லாது” என இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி பேச்சுவார்த்தை நடவடிக்கையில் இருந்து வாஷிங்டன் விலக வேண்டும் என்பதை இது குறிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் உரையாற்றிய பாலத்தீன அதிபர் அப்பாஸ், “இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாக செயல்படுவதால்” மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்கு அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதை “ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறினார்.

டிரம்ப் நிர்வாகத்துடன் ஈடுபட்டிருந்த பாலத்தீனியர்கள் “இந்த நூற்றாண்டுக்கான உடன்படிக்கையை” ஏற்றுக்கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது “மிக மோசமான அடி” என்றும் அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்காவின் தனிப்பட்ட முடிவை நிராகரித்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள், இது பாலத்தீன மக்களின் உரிமைக்கு எதிரான “தாக்குதலாக” கருதுவதாக தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்கான முயற்சிகளை அமெரிக்கா “குறைந்து மதிப்பிடுவதாக” குற்றஞ்சாட்டியுள்ள அவர்கள், இந்த முடிவு “தீவிரவாதம் மற்றும் பயங்கரவைதத்தை தூண்டும் வகையில் உள்ளதாக” தெரிவித்துள்ளனர்.

“சட்டத்துக்கு புறம்பான இந்த முடிவை திரும்பப் பெறாமல் இருப்பதற்கான விளைவுகளுக்கு அமெரிக்கா தான் பொறுப்பு” என்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூறியுள்ளது.

“பாலத்தீன நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலைநகராக ஜெருசலேத்தை அறிவிக்க வேண்டும்” என அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாலத்தீன நகரத்தின் சட்ட நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா வை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*