பொப் பாடகிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த எகிப்து நீதிமன்றம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எகிப்து நாட்டு பொப் பாடகி ஒருவர் இசை ஆல்பத்தில் ஒழுக்கமின்றி, சர்ச்சைக்குரிய வகையில் நடித்திருந்த காரணத்தால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Shaimaa Ahmed (25), இவர் பிரபல பாப் பாடகி ஆவார், இவர் இசை ஆல்பம் ஒன்றில், மிகவும் கவர்ச்சியாகவும், தீய ஒழுக்கங்களை பரப்பும் விதமாக உடல் அசைவுகளை கொடுத்திருந்தார்.

இதனால், இவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையில் இந்த இசை ஆல்பத்தின் இயக்குநர் மற்றும் பாடகி ஆகிய இருவருக்கும் எகிப்து நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்துள்ளது.

இதுகுறித்து பாடகி தனது முகநூல் பக்கத்தில், இதுபோன்ற ஆல்பத்தில் நடித்ததல் அனைத்து தரப்பினரின் தாக்குதலுக்கு ஆளாவேன் என நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என பதிவிட்ட சிறிது நேரத்திலேயே அதனை நீக்கிவிட்டார்.

கடந்த ஆண்டு, எகிப்து நீதிமன்றங்கள் மூன்று பெண்கள் ஒழுக்கமின்றி நடனமாடிய குற்றத்திற்காக ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*