மாணவர் செயற்பாட்டாளர்களின் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருக்கும் பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்களான ஜினரத்தன தேரர் மற்றும் சனத் பண்டார ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரினதும் விடுதலையை வலியுறுத்தி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு – வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர்கள் கூட பல கோடி ரூபா கொள்ளையிட்டு தற்போது பிணையில் வெளியில் வந்து சாதாரணமாக நடமாடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், மாணவர்களது உரிமைகளுக்காக போராடிய எமது தலைவர்களை தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பது எந்தவகையில் நியாயமானது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, எமது மாணவர் சங்கப்பிரதிநிதிகள் சுயநலத்திற்காக அன்றி மாணவர்களது உரிமைகள் மற்றும் நலன்களுக்காகவே போராடினார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*