
நாசா விண்வெளி ஆய்வு மையமானது முதன் முறையாக 1975ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தது.
இதன் பெயர் Viking 1 என்பதாகும். அதன் பின்னர் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு 7 ரோவர் வகை விண்கலங்களை அனுப்பியிருந்தது.
இவை அனைத்தும் செவ்வாய் கிரகத்தில் இருந்து புகைப்படங்களை மட்டுமே அனுப்பி வந்தன.
ஆனால் செவ்வாய் கிரகத்தில் உள்ள மாதிரிகளை பூமிக்கு அனுப்பியதில்லை.
ஆய்வின் அடுத்த கட்டமாக செவ்வாய் கிரகத்திலுள்ள மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய நாசா முடிவெடுத்துள்ளது.
இதற்காக 2020ம் ஆண்டில் புதிய ரோவர் விண்கலத்தினை அனுப்பவுள்ளது.
இதிலுள்ள விசேட ரேடார் ஆனது மேற்பரப்பிலிருந்து சுமார் 30 அடி ஆழத்தில் நீர் அல்லது பனிக்கட்டி இருப்பதனைக் கூட கண்டறியக்கூடியது.
இந்த விண்கலம் 2020ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படவுள்ளதுடன் 2021ம் ஆண்டு பெப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கவுள்ளது.
இந்நிலையில் குறித்த விண்கலத்திலுள்ள சிறப்பம்சங்களை எடுத்துக்காட்டும் படத்தினை நாசா வெளியிட்டுள்ளது.