கோவையை அடுத்து திருப்பூரில் ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி

பிறப்பு : - இறப்பு :

கோவையை தொடர்ந்து, திருப்பூரிலும், ஏ.டி.எம்., மையத்தில், பணம் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது; ‘லாக்கர்’ உடைக்க முடியாததால், பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது.

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, ஸ்டேட் பாங்க், ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று காலை, பணம் எடுப்பதற்காக வந்த நபர் ஒருவர், ஏ.டி.எம்., முன்பக்க லாக்கர் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கு, காவலாளி யாரும் இல்லாத நிலையில், இது குறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு விரைந்த, திருப்பூர் வடக்கு போலீசார், ஏ.டி.எம்., மையத்தை பார்வையிட்டனர்; மெஷினின், முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. பணம் இருக்கும் லாக்கரை உடைக்க முயன்று, அது திறக்காத நிலையில், மர்ம நபர்கள் ஏமாற்றத்துடன் சென்றது தெரிந்தது. இதனால், ஏ.டி.எம்.,ல் இருந்த, பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது.

கடந்த வாரம், கோவை பீளமேட்டில் உள்ள ஏ.டி.எம்.,ல், 26.70 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. தற்போது திருப்பூரிலும் ஏ.டி.எம்., கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்த ஏ.டி.எம்., மையத்தில், காவலாளி இல்லை; மின் விளக்கு, கேமராவும் முறையாக பராமரிக்கப்படவில்லை. இதை நோட்டமிட்டு, மர்ம நபர்கள் கைவரிசை காட்ட முயன்றுள்ளதாக, போலிஸார் தெரிவிதித்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit