மேளம் அடித்து ஓட்டு கேட்ட மதுசூதனன்

பிறப்பு : - இறப்பு :

மேளம் அடித்து, வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டு, மதுசூதனன் பிரசாரத்தில் ஈடுபட்டார். சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். இவர், இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி.நகர் மார்கெட் பகுதிகளில், நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இவருக்கு, மேள, தாளங்கள் ஒலிக்க, கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். வீடுகளின் மாடியில் நின்று, பெண்கள், பூ துாவினர். ‘இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள்’ என, கோஷம் போட்டும், மேளம் கொட்டியும், வாக்காளர்களிடம், மதுசூதனன் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit