பெண்ணாக பிறந்து… திருநங்கையாக மாறி குழந்தை பெற்றெடுத்த நபர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் திருநங்கை ஆண் ஒருவர் முதன் முறையாக குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

விஸ்கொன்சின் மாகாணத்தில் பெண்ணாக பிறந்து திருமணத்திற்கு பின்னர் திருநங்கையாக மாறிய நபர் Kaci Sullivan(30). இவர்தான் தற்போது உலகிலேயே முதன் முறையாக பெண்ணாகவும் பின்னர் திருநங்கையாகவும் மாறி குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

தொடர்ந்து 7 நாட்கள் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்த Kaci Sullivan, அறுவைசிகிச்சை முறையில் ஆரோக்கியமான குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

தமது 27 வயது பார்ட்னருடன் குடியிருந்துவரும் Kaci Sullivan தமது குழந்தையை பாலினம் குறிப்பிடாத வகையில் முழு சுதந்திரத்துடன் வளர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், குறித்த குழந்தை வளர்ந்த பின்னர் தமது பாலினத்தை முடிவு செய்யட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Kaci திருநங்கையாக மாறுவதற்கு முன்னர் முன்னாள் 5 வயது குழந்தைக்கு தாயாராக இருந்துள்ளார்.

625-0-560-350-160-300-053-800-668-160-90-5

கர்ப்ப காலத்தில் இவர் சமூக வலைதளத்தில் பதிவேற்றிய புகைப்படங்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது. குழந்தை பிறந்த அந்த நொடி, அதன் முதல் அழுகை, அந்த தருணங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தாம் ஒரு குட்டி மனிதனை உருவாக்கியுள்ளதை எண்ணிப் பார்க்கையில் வியப்பே மேலிடுகிறது என Kaci உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

26 வார கர்ப்ப கால அவஸ்தைகள் 7 நாட்கள் மருத்துவமனை வாசம் என வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள் அவை என பூரிக்கும் Kaci, தமது குழந்தை மற்றும் பார்ட்னருடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*