காரை நிறுத்தி கிறிஸ்துமஸ் தாத்தா செய்த செயல்; நெகிழ்ச்சி சம்பவம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இளம் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென்று கிழே விழுந்ததால், அவரை கிறிஸ்துமஸ் தாத்தா உடனடியாக தூக்கி உதவி செய்துள்ளார்.

பிரித்தானியாவில் தற்போது பனி பொழிவு கனமாக இருந்து வருகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பனிப்பொழிவின் காரணமாக விமான சேவைகள் மற்றும் இரயில் சேவைகள் போன்றவைகளில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது.

இந்நிலையில் Watford பகுதியில் பாதசரிகள் நடந்து செல்லும் பாதையில், பெண் ஒருவர் ஷாப்பிங் செய்து முடித்து வீடு, திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.


அப்போது அங்கு பனிப் பொழிவு அதிகம் காரணமாக, அவர் நடக்க முடியாமல் திடீரென்று கீழே விழுந்தார், இதில் அவர் வாங்கி வந்த பொருட்கள் அனைத்தும் பறந்தன.

இதைக் கண்டு காரில் வந்த கிறிஸ்துமஸ் தாத்தா, உடனடியாக காரை நிறுத்தி, அப்பெண்ணிற்கு உதவிக் கரம் நீட்டினார்.

இந்த வீடியோவை பின்னே காரில் வந்த Dave Cordoza என்பவர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

வீடியோவைக் கண்ட பலரும் உண்மையான கிறிஸ்துமஸ் தாத்தா இவர், உண்மையான ஹீரோ இவர் தான் என்று கூறி புகழ்ந்து வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*