சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக பொலிஸ் பெரியபாண்டி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

periya pandiyan

ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்ப தமிழக இன்ஸ்பெக்டட், தனக்கு சொந்தமான நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை விவகாரம் தொடர்பாக தினேஷ் மற்றும் செளத்ரி என்ற இருவரைப் பிடிக்க, தமிழக பொலிசார் தனிப்படை அமைத்து ராஜஸ்தானுக்கு சென்றிருந்தனர்.

அப்போது இவர்கள் ஜெய்ப்பூர் அருகே பாலி மாவட்டத்தில் பதுங்கியிருப்பது பொலிசாருக்கு தெரியவந்தால், அங்கு இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்துள்ளது.

இந்த சண்டையின் போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குண்டடி பட்டு அந்த இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவரின் இறப்பு செய்தியை கேட்டு அவரது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர். அதுமட்டுமின்றி தமிழக பொலிசார் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குறித்து உருக்கமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இவர் கடந்த 2000-ஆம் ஆண்டில் பொலிஸ் துறையில் சேர்ந்தார். சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார்.

அதன் பின் இவர் சாலைப்புதுர் கிராமத்தில் இருக்கும் தனக்கு சொந்தமான நிலத்தை அங்குள்ள பள்ளிக் கூடம் ஒன்றிற்கு தானமாக வழங்கியுள்ளார். இவரின் இறந்த செய்தியை கேட்ட சாலைப்புதூர் கிராம மக்கள் பெரும் சோகத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்த நகைக்கடை கொள்ளை வழக்கில் சென்ராம், சங்கர்லால் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit