கேப்பாபிலவில் இராணுவத்தின் பிடியிலுள்ள 111 ஏக்கர் காணிகள் எதிர்வரும் 28 ஆம் திகதி விடுவிக்கப்படும்!

பிறப்பு : - இறப்பு :

கேப்பாபிலவில் இராணுவத்தின் பிடியிலுள்ள 111 ஏக்கர் காணிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து 28 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செ.பிரணவநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

கேப்பாப்புலவு காணி விடுவிப்புத் தொடர்பில் அண்மையில் மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்தல் விடுத்திருந்தது. இதன்படி கேப்பாப்புலவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களுக்கு சொந்தமான 111 ஏக்கர் காணிகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் 59 ஆவது படைத்தளபதி ஆகியோர் இணைந்து விடுவிப்புக்காக அறிவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்.

கேப்பாப்புலவில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள காணிகள் முழுமையாக விடுவிக்கக் கோரியும், அக் காணிகளுக்குச் சொந்தமான 138 குடும்பங்களையும் தத்தமது சொந்த காணிகளில் மீள்குடியேற்றுமாறு கோரியும் தொடர்ச்சியாக 287 நாட்களாக போராட்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit