புளூட்டோவை நெருங்கத் தயாரானது அமெரிக்க விண்கலம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

pluto

புளூட்டோவையும், தொலைதூர விண்வெளியையும் ஆய்வு செய்ய அமெரிக்காவின் “நாஸா’ ஆய்வு மையம் அனுப்பிய “நியூ ஹொரைஸன்ஸ்’ விண்கலம், புளூட்டோவை மிக நெருக்கமாகச் சந்திப்பதற்கான “கவுன்ட் டெளன்’ வியாழக்கிழமை தொடங்கியது.

கடநத 2006-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட நியூ ஹொரைஸன்ஸ், புவியிலிருந்து 750 கோடி கி.மீ. தொலைவிலுள்ள புளூட்டோவை வரும் ஜூலை மாதம் 14-ஆம் தேதி அடைகிறது.

அப்போது புளூட்டோ, அதன் ஐந்து நிலவுகள் ஆகியவற்றின் சுற்றுப்பாதைக்குள் விண்கலனை செலுத்துவதற்கான பணிகள் பல கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளன.

அதற்கான முதல்கட்டப் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட விண்கலங்களிலேயே மிக வேகமானதான நியூ ஹொரைஸன்ஸில், சக்தி வாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அது புளூட்டோவை எடுத்து அனுப்பவிருக்கும் படங்களின் மூலம், அந்த கிரகத்தைப் பற்றி இதுவரை தெரியாத பல விவரங்கள் தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நாஸா ஆய்வு மையத்தின் கோள்கள் அறிவியல் பிரிவு இயக்குநர் ஜிம் கிரீன் கூறுகையில், “”புவியிலிருந்து மிகுந்த தொலைவிலுள்ள புளூட்டோ கிரகத்துக்கு நாஸா முதல்முறையாக அனுப்பியுள்ள விண்கலம் மூலம், இதுவரை பார்த்தறியாத நெருக்கத்தில் அந்தக் கோளை மனித குலம் காணவுள்ளது” என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit