ஏர் டெக்கானில் ஒரு ரூபாயில் பறக்கலாம்!!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஏர் டெக்கான் விமானம் மீண்டும் சேவையைத் துவங்குவதுடன், ஒரு ரூபாய் கட்டணத்திலும் இயக்க முடிவு செய்து இருப்பதாக அதன் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் கூறியுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் கடந்த 2003 ஆம் ஆண்டு ஏர் டெக்கான் விமான சேவையைத் தொடங்கினார். குறைந்த கட்டணம் அதாவது, ஒரு ரூபாய் கட்டணத்தை அறிமுகப்படுத்தினார். பயணிகளை ஈர்க்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த ஒரு ரூபாய் கட்டண அறிவிப்பால் ஏர் டெக்கான் விரைவில் நஷ்டத்தை சந்தித்தது. இதையடுத்து, கிங்பிஷர் விமான நிறுவனத்துடன் இணைந்தது. கிங்பிஷர் 2011-ம் ஆண்டில் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. ஏர் டெக்கான் சேவையும் தடைபட்டது.

இந்த நிலையில் மீண்டும் தனது சேவையை உதான் திட்டத்தின் கீழ் குறைந்த கட்டணத்தில் இயக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் வரும் 22-ம் தேதி நாசிக்கில் இருந்து மும்பைக்கு முதல் விமான இயக்கப்படுகிறது.

துவக்கத்தில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஷில்லாங் ஆகிய சிறு நகரங்களை இணைக்கும் வகையில் இந்த சேவை துவங்கப்படுகிறது. உதான் திட்டத்தின் கீழ் ஒரு மணி நேரம் விமானத்தில் பறக்க ரூ. 2,500 கட்டணம் என்று மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. மீதமுள்ள தொகையை மத்திய அரசு மானியமாக வழங்கும். இந்தக் கட்டணம் டயர் -2 மற்றும் டயர்-3 நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இதுகுறித்து ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத் கூறுகையில், ”நாசிக்கில் இருந்து மும்பைக்கு சாலை மார்க்கமாக செல்ல 4 மணி நேரமாகும். விமானத்தில் 40 நிமிடத்தில் சென்று சேரலாம். டிக்கெட் கட்டணம் ரூ.1400. சில அதிர்ஷ்டசாலி பயணிகளுக்கு ரூ.1 கட்டணத்திலும் டிக்கெட் கிடைக்கும். இவர்கள் முதலில் டிக்கெட் புக் செய்பவர்களாக இருக்க வேண்டும்.
2018, ஜனவரி மாதம் டெல்லியில் இருந்து ஆக்ரா, சிம்லா, லூதியானா, டேராடூன், குலு பகுதிகளை டெல்லியுடன் இணைக்கும் வகையில் விமான சேவை தொடங்கப்படும்’ என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*