வேலூர் மருத்துவ மாணவி ஹோட்டல் பாத்ரூமில் காதலருடன் தற்கொலை!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

suicide_by_hanging_themselves_82354

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்துவரும் மருத்துவ மாணவி, தன் காதலருடன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் ஹோட்டல் பாத்ரூமில் தற்கொலை செய்துள்ளார்.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ராகபிரியா என்ற மாணவி இறுதி ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இவரும் சொந்த ஊரான திருவண்ணாமலை போளூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

இவர்களின் காதலுக்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், மாணவியும் அவரது காதலரும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள ஹோட்டல் பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தனர்.

இதனைக் கண்ட சிலர், உடனே அவர்களைக் காப்பாற்ற அங்கு விரைந்தனர். ஆனால், துரதிர்ஷடவசமாக மாணவியின் காதலர் அதற்கு முன்பாகவே உயிரிழந்துவிட்டார். இந்நிலையில், உயிருக்குப் போராடிய மாணவியை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

இந்தத் தற்கொலை முயற்சியைத் தொடர்ந்து, பகயம் பகுதி போலீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit