உலகக் கோப்பையை இந்தியா தக்க வைக்கும்’

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையைத் தக்க வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக, முன்னாள் கேப்டன் செüரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின், கங்குலி பேசியதாவது:

இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. விளம்பரத்துக்காக இதைச் சொல்லவில்லை. ஒரு நாள் தொடர் என்று வந்து விட்டால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு என்பது உறுதி. இந்திய அணி வலுவான பேட்டிங் வரிசையைப் பெற்றுள்ளது. அதோடு, டெஸ்ட் தொடருக்கும், ஒரு நாள் தொடருக்கும் வித்தியாசம் உள்ளது. டெஸ்ட் போட்டிகளை விட ஒரு நாள் ஆட்டங்களில் பந்து வீச்சாளர்களின் பணிச்சுமை குறைவு.

ஏற்கெனவே சொன்னதைப் போல, தற்போதைய இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என்று கங்குலி தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit