உலகின் பார்வையில் இருந்து தொலைந்த பிரெஞ்சு கிராமம்!!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

paris-snow

பிரெஞ்சு கிராமம் ஒன்று பெய்துவரும் கடும் பனி மற்றும் பனிப்புயலால் உலகின் பார்வையில் இருந்து தொலைந்துபோயுள்ளது என ஊடகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆல்ப்ஸ் மாவட்டத்தில் (Hautes-Alpes) உள்ள Névache எனும் சிறிய கிராமமே இவ்வாறு தொலைந்துபோயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனி காரணமாக , கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர்கள் உயரத்தில் உள்ள இந்த சிறிய கிராமம் முற்றாக மூடப்பட்டுள்ளது. மின்சாரம் தடைப்பட்டு, வீதிகள் அனைத்தும் முற்றாக மூடப்பட்டுள்ளன. ஒரு மீட்டர் உயரம் வரை பனி உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர இந்த கிராமத்தில் 360 பேர் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கிராமத்தின் நகர முதல்வர் தெரிவிக்கும் போது, ‘பல வருடங்களின் பின்னர் இதுபோன்ற பனிப்பொழிவை சந்திக்கின்றோம். ஞாயிற்றுக்கிழமையில் இருந்து ஒரு மீட்டர் உயரத்துக்கும் மேலான பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. கிராமத்துக்குள் செல்லும் RD 1094 சாலை மூடப்பட்டுள்ளது!’ என குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கும் போது, ‘நாளை திங்கட்கிழமை (நேற்று) தொடர்ந்தும் பனிப்பொழிவு உள்ளதாகவும், பனி மூடியிருப்பததாலும், பாதை மூடப்பட்டுள்ளதாலும் நாங்கள் தனிமையை உணர்கிறோம்!’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit