ரயிலை பார்ட், பார்டாக திருடிய கில்லாடிகள்; ஒரே ஆண்டில் 11 லட்சம் கொள்ளையர்கள் கைது!

பிறப்பு : - இறப்பு :

ரயிலில் உள்ள உபகரணங்களை கொள்ளையடித்த 11 லட்சம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்திய ரயில்கள் கொள்ளையர்களுக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதமாக திகழ்கிறது.

அதிலுள்ள காப்பர் ஒயர்கள் முதல் இரும்பு போல்ட்கள் வரை, பயணிகளுக்கான துண்டுகள் முதல் வாஷ் பேசின் வரை, படுக்கை விரிப்புகள் முதல் தண்ணீர் குழாய்கள் வரை அனைத்தையும் திருடிச் சென்று விடுகின்றனர்.

கடந்த ஆண்டு மட்டும் ரயில் போலீசாரின் நடவடிக்கைகளுக்கு பஞ்சமில்லை. வரலாறு காணாத அளவிற்கு, 11 ஆயிரம் கொள்ளையர்களை பிடித்துள்ளனர்.

இவர்கள் ரயிலை வளைத்து, வளைத்து திருடிச் சென்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2.23 லட்சம் பேரை கைது செய்துள்ளனர்.

இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் 1.22 லட்சம் பேரைப் பிடித்துள்ளனர்.

இவர்கள் ரயிலில் இருந்து தண்டவாள கொக்கிகள், தகடுகள், போல்ட்கள், மேற்புற ஒயர்கள், கழிவறை பொருத்தல்கள், டியூப் லைட்கள், விசிறி, துடைப்பான்கள், விரிப்புகள் ஆகியவற்றை திருடியுள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் 98,594 பேரும், தமிழ்நாட்டில் 81,408 பேரும், குஜராத்தில் 77,047 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பேசிய ரயில்வே அதிகாரிகள், தண்டவாளங்களில் இருந்து விலை உயர்ந்த இரும்பு, காப்பர், சிக்னல் கேபிள், ஒயர்கள், கிளிப்களை கொள்ளையடித்துச் செல்வதாக கூறினர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit