டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

dhinakaran2-ttv

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தை தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையத்தை முடக்கியது.

இதையடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அரசு ஊழியருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சூழலில் டிடிவி தினகரன் ஜாமினில் விடுதலை ஆனார்.

இந்த வழக்கு விசாரணையில் கடந்த ஜூலை மாதம், டெல்லி போலீசார் தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அதில் டிடிவி தினகரன் பெயர் இடம்பெற்றுள்ளது.

தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, ஹவாலா தரகர்கள் புல்கித் குந்த்ரா, ஜெய் விக்ரம் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit