தன்னையும், ஜனாதிபதியையும் பிரிப்பதால் யாருக்கு என்ன இலாபம்? மகிந்த ஆதங்கம்

பிறப்பு : - இறப்பு :

தனக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதனால் யாருக்கு என்ன இலாபம்? என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இன்றைய தினம் கண்டி – தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “அரசாங்கம் பதவியேற்று மூன்று ஆண்டுகளில் என்ன செய்துள்ளதென்பதை மக்கள் அறிந்துகொள்வார்கள். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.

வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த விடயங்களுக்கு தொடர்புடையவர்ளுடன் நாம் உடன்படிக்கை செய்துகொள்ள முடியாது. அவ்வாறு செய்தால் நாமும் அதில் பங்குதாரர் ஆகிவிடுவோம்.

நாட்டில் சுயாதீனமாக செயற்படுவதற்கு யாருக்கும் உரிமையுண்டு. இந்நிலையில், தன்னையும், ஜனாதிபதியையும் பிரிப்பதால் யாருக்கு என்ன இலாபம் கிடைக்கப் போகின்றது?

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விடயங்களுக்கு எதிராக ஜனாதிபதி கருத்து தெரிவித்திருந்த போதிலும் அதில் மாற்றங்கள் செய்யப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit