மாயமான மலேசிய விமானம் தொடர்பில் வெளியான பகீர் தகவல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

A woman writes a message on a board for passengers onboard missing Malaysia Airlines Flight MH370 and their family members, at Dataran Merdeka in Kuala Lumpur March 22, 2014. Two weeks after the airliner went missing with 239 people on board, officials are bracing for the "long haul" as searches by more than two dozen countries turn up little but frustration and fresh questions.  REUTERS/Samsul Said (MALAYSIA - Tags: DISASTER TRANSPORT)

மலேசியாவில் இருந்து 239 பயணிகளுடன் புறப்பட்ட MH370 விமானம் அண்டார்டிகாவில் பனிப்படலங்களுக்கு அடியில் புதைந்து போயிருக்கலாம் என ஆய்வாளர்கள் பகீர் தகவ்ல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2014 மார்ச் 8-ஆம் திகதி மலேசியாவின் கோலா லம்பூர் விமான் நிலையத்தில் இருந்து 239 பயணிகளுடன் சீனாவின் பீஜிங் நோக்கி சென்ற MH370 விமானம் மாயமானது.

mh

குறித்த விமானம் தொடர்பில் சர்வதேச நாடுகளின் உதவியுடன் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. ஆனால் இதுவரை விமானம் தொடர்பில் உறுதியான எந்த தகவலும் கிடைக்கபெறவில்லை.

இருப்பினும் மாயமான விமானத்தின் பாகங்கள் என கூறும்படி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சில பொருட்களை மட்டுமே மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆய்வாளர்கள் புதிய கொணத்தில் இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். சீனாவின் பீஜிங் நோக்கிச் சென்ற குறித்த விமானம் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி திருப்பப்பட்டது ஏன் என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

Norman Davies என்ற வரலாற்று ஆய்வாளர் மாயமான விமானம் தொடர்பில் அடுக்கடுக்கான சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

மாயமான விமானத்தை skyjacking முறைப்படி கடத்தியிருக்கலாம் எனவும், விமானத்தின் கட்டுப்பாட்டை மொத்தமாக ஊடுருவி இதை சாத்தியப்படுத்தி இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி குறித்த விமானத்தை அண்டார்டிகாவின் பனிப்படலத்தின் அடியில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாயமான குறித்த விமானம் மூன்று கட்டமாக கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் பீஜிங் நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்தை மீண்டும் மலேசியா நோக்கி திருப்பி விட்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit