ஒன்று சேர்ந்த மூன்று நாடுகள்..வடகொரியாவுக்கு சவால்

பிறப்பு : - இறப்பு :

உலகநாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால் அந்நாட்டின் மீது ஐ.நா பல்வேறு தடைகளை கொண்டு வந்தது. ஆனால் வடகொரியாவோ தொடர்ந்து தன்னுடைய சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

வடகொரியாவின் இந்த செயல் அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானுக்கும் மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.

அதுமட்டுமின்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்னுக்கும் வார்த்தைப் போர் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனை அமெரிக்காவுக்கு பீதியை கிளப்பியுள்ளது, ஏனெனில் அந்த ஏவுகணை அமெரிக்காவை தாக்கும் வல்லமை கொண்டது என்று செய்திகள் வெளியானது.

இதனால் வடகொரியாவை அச்சுறுத்தும் விதமாக அமெரிக்கா நேற்று தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து கூட்டுப் போர் ஒத்திகைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த பயிற்சியின் போது மூன்று நாடுகளின் கடற்படைகளும் பங்கேற்றுள்ளது, அதைத் தொடர்ந்து போர் கப்பல்கள், ஏவுகணைகள் என பல உபகரணங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாடுகளின் சோதனையும் வடகொரியாவிற்கு சவால் விடுக்கும் அளவிற்கு இருந்ததாக கூறப்படுவதால், மீண்டும் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit