சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகே சுருட்டு வடிவ விண்கல் விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா? என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர்.

பிரபஞ்சத்தில் பால்வெளி என அழைக்கப்படும் எண்ணற்ற நட்சத்திர கூட்டங்கள், பெரிய நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறும் போது உருவாகும் சிறிய நட்சத்திரங்கள், அவற்றை சுற்றி வரும் கிரகங்கள் அவற்றின் துணை கோள்கள் நிரம்பியுள்ளன. பிரபஞ்சத்தின் ஏதேனும் ஒரு மூலையில் பூமியை போன்ற உயிர்வாழ்வதற்கு ஏற்ற கிரகங்களும் அதில் உயிர்களும் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வான்வெளி விஞ்ஞானிகள் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஆனால் வேறு கிரகத்தில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.

இங்கிலாந்தை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா என்பதை ஆராய புதிய திட்டம் ஒன்றை லண்டனில் தொடங்கியுள்ளார். இந்த திட்டத்துக்காக அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.640 கோடி செலவழிக்கப்படும். ரஷ்யாவை சேர்ந்த சிலிகான் வேலி தொழில் அதிபர் யூரி மில்னர் இந்த திட்டத்துக்கு நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளார். இந்த திட்டத்திற்கு கேம்ரிஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த வானவியலாளர் ,காஸ்மோலாகிஸ்ட் பேராசிரியர் லார்டு மார்ட்டீன் ரீஸ், தலைமை தாங்குகிறார்.

வேற்று கிரகவாசிகளின் பரிமாற்றங்கள் கேட்க உலகில் மிக சக்தி வாய்ந்த இரண்டு ரேடியோ தொலைநோக்கிகள் முன்னணி விஞ்ஞானிகளை கொண்டு நிறுவப்படுகிறது.மற்றொரு தொலைநோக்கி மற்ற உலகங்களில் இருந்து வரும் லேசர் சிக்னல்களை தேடும்.இந்த தொலைநோக்கிகள் மூலம் பூமியை தவிர மற்ற நட்சத்திரங்களில், கிரகங்களில், விண்வெளியில் வேற்று உயிரினங்கள் வாழ்கின்றனவா என ஆய்வு செய்யப்படும்.

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வெல்சில் 64 மீட்டர் ( 210 அடி ) பார்க் தொலைநோக்கி மூலமும், மேற்கு வர்ஜினியாவில் 100 மீட்டர்( 328 அடி) பர்ட் கிரீன் பேங்க் தொலைநோக்கியும் நிறுவப்பட்டு 10 ஆண்டுகள் கண்காணிக்கப்படும்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு பூமிக்கு அருகில் வித்தியாசமான விண்கல் ஒன்று வந்தது. பார்ப்பதற்கு சுருட்டு வடிவில் இருக்கும் இந்த விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது. உலகிலேயே முதல் முறையாக பூமிக்கு சொந்தம் இல்லாமல் வானத்தில் பறந்த முதல் பொருள் இதுதான். இது மற்ற கற்களை போலவோ எரி நட்சத்திரம் போலவோ இல்லாமல் பறக்கும் பொருள் போல இருக்கிறது.இதன் அளவு 400 மீட்டர் நீளம் மட்டுமே உள்ளது. மேலும் ஒருபக்கம் முழுக்க சிவப்பாகவும், ஒரு பக்கம் முழுக்க கருப்பாகவும் இருக்கிறது. இந்த விண்கல் கண்டிப்பாக சூரிய குடும்பத்திற்கு சொந்தமான விண்கல் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

இதை கண்டுபிடித்தவர்கள் இதற்கு ‘ஒமுஅவுமா’ என்று பெயர் வைத்தார்கள்.
மேலும் ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து தீவிரமாக ஆராய்ச்சி செய்ய தொடங்கினார்கள். மேலும் இந்த விண்கல் இன்னும் சில தினங்களில் மொத்தமாக பூமியை கடந்து சென்றுவிடும் என்பதால் இதில் தீவிரமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது.

இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்ட போது இது சூரியனுக்கும் மிக அதிக தொலைவில் இருந்தது. ஆனால் தற்போது இது பூமியை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது. பூமிக்கு அருகில் வரவர இதன் வேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பூமிக்கு மிக அருகில் வந்துள்ள இது தற்போது 90 கிமீ வேகத்தில் செல்கிறது. பூமிக்கு சொந்தம் இல்லாத ஒரு விண்கல் இவ்வளவு வேகத்தில் செல்வது இதுவே முதல்முறை ஆகும்.

இப்போது, ஸ்டீபன் ஹாக்கிங் தலைமையிலான ஒரு விஞ்ஞான குழு “சுருட்டு வடிவ” பொருள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது. இந்த பொருள் பூமியை கடந்து செல்வதற்கு முன் அதை ஆராய்ச்சி செய்து முடித்து இருப்பார்கள். அதற்குள் ஏலியன் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க இந்த முயற்சி செய்யப்படுகிறது.

இந்த ஆராய்ச்சிக்காக அந்த விண்கலத்திற்கு சில சிக்னல்கள் அனுப்பப்படும். அந்த சிக்னல்களுக்கு பதில் வரும் பட்சத்தில் அதற்குள் ஏலியன் இருப்பது உறுதியாகும். ஆனாலும் இந்த ஆராய்ச்சி தேவையில்லாத செலவு என்றும் ரஷ்யாவை சேர்ந்த அறிஞர்கள் சிலர் தெரிவித்து இருக்கின்றனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியாகும்.

ஹார்வர்ட் பல்கலைக்கழக வானியற்பியல் பேராசிரியர் ஏவி லோப் இது குறித்து கூறியதாவது:-

ஒரு வேளை அது வேற்றுகிரகவாசிகளின் வாகனமாக இருக்கலாம் ஒரு வேளை உளவு காரணமாக கிரகங்களில் சிறிய விண்கலங்களை இறக்க வந்து இருக்கலாம்.

அந்த பொருள் தோற்றத்தில் இயல்பாக இருந்தால், சூரிய மண்டலத்தில் இது போன்ற இன்னும் பல இருக்க வேண்டும் .மேலும் அவர்களில் பெரும்பாலோர் இயல்பானவர்களாக இருந்தாலும், ஒருவேளை அவர்கள் ஒரு செயற்கை தோற்றம் இருக்க வேண்டும். மிகவும் அசாதாரண அது தோன்றுகிறது. வேற்று கிரகவாசிகலால் அனுப்பப்பட்ட ஒரு செயற்கையாக உருவாக்கப்பட்ட விண்கலமாக எனக்குத் தோன்றுகிறது.

வேற்றுகிரகவாசிகள் தேடுதல் ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆண்ட்ரூ சிமியோன் கூறும் போது, 10 மணி நேர கண்கணிப்பு பணியை தொடங்கும் என கூறினார்.

மேற்கு வர்ஜினியாவில் 100 மீட்டர்( 328 அடி) பர்ட் கிரீன் பேங்க் தொலைநோக்கி மூலம் இது தேடப்படும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*