டிரம்ப் மீது 3 பெண்கள் மீண்டும் பாலியல் புகார்

பிறப்பு : - இறப்பு :

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 8–ந் தேதி நடந்தது. அதற்கு முன்பாக தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டம் அடைந்திருந்த வேளையில் அப்போது குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் மீது பெண்கள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

டிரம்ப் மீது பல்வேறு பெண்களும் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியது தொடர்பாக பிரேவ் நியூ பிலிம்ஸ் நிறுவனத்தார் ‘16 பெண்கள் மற்றும் டொனால்டு டிரம்ப்’ என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை எடுத்து இப்போது வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், அந்த பிரேவ் நியூ பிலிம்ஸ் நிறுவனத்தார் ஏற்பாட்டில், டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்திய 3 பெண்களான ஜெசிகா லீட்ஸ், சமந்தா ஹால்வி, ரேச்சல் குரூக்ஸ் ஆகிய 3 பேரும் நியூயார்க்கில் நேற்று முன்தினம் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் தங்கள் மீது அவர் கை வைத்ததாகவும், அணைத்ததாகவும், வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாகவும் சரமாரியாக குற்றம் சாட்டினர்.

2006–ம் ஆண்டு அமெரிக்க அழகி போட்டியில் பங்கேற்ற சமந்தா ஹால்வி, தன்மீது டிரம்ப் காதல் பார்வை வீசியதாக கூறினார். டிரம்ப் மீதான பாலியல் புகார் குறித்து அமெரிக்க பாராளுமன்ற குழு விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஜெசிகா லீட்ஸ் நிருபர்களிடம் பேசும்போது, ‘‘நியூயார்க் நகருக்கு விமானத்தில் வந்தபோது என்னைப் பார்த்த டிரம்ப், என் மீது பாய்ந்து விட்டார்’’ என்று கூறினார்.

ரேச்சல் குரூக்ஸ், ‘‘டிரம்ப் டவரில் லிப்டுக்கு வெளியே வைத்து டிரம்ப் என் உதடுகளில் முத்தம் தந்தார். இதனால் நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்’’ என கூறினார்.

ஆனால் டிரம்ப் மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை கூறியது.
இதுபற்றி பாராளுமன்ற குழு விசாரணை நடத்த முடியாது எனவும் வெள்ளை மாளிகை நிராகரித்து விட்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit