காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 5 ராணுவ வீரர்கள் மாயம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே குரஸ் செக்டார் பகுதியில் ராணுவச்சாவடி உள்ளது.

நேற்று முன்தினம் இரவு இந்த ராணுவச்சாவடி அமைந்து உள்ள பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது ராணுவச்சாவடியில் இருந்த 3 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி மாயமாகினர்.

உடனடியாக மீட்புகுழுவினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு மாயமான வீரர்களை மீட்கும் பணி தொடங்கியது. ஆனால் அங்கு தொடர்ந்து பனிப்பொழிவு நிலவுவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

இருப்பினும் மாயமான வீரர்களை உயிருடன் மீட்க தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போல் குப்வாரா மாவட்டத்தில் நுஹம் செக்டார் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் மாயமாகினர். அவர்களை மீட்பதற்கான பணியும் முழு மூச்சில் நடந்து வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*