கள்ளக் காதலியின் மகன் கல்லால் அடித்து கொலை: லூசு போல் சுற்றித் திரிந்த கொலையாளி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-0-560-350-160-300-053-800-668-160-90

தமிழகத்தில் கள்ளக் காதலியின் மகனை அடித்து கொலை செய்து விட்டு, ஒன்றும் தெரியாத லூசு போல் திரிந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

திருக்கோவிலூரின் எடையார் பகுதியைச் சேர்ந்தவர் பாலுச்சாமி. இவர் பெங்களூரில் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்த போது அங்கிருந்த இரத்தினம்மாள் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இரத்தினம்மாள் ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்த நிலையில் உள்ளார். அதுமட்டுமின்றி அவருக்கு முன்னாள் கணவன் மூலம் அப்பு என்ற மகன் ஒருவர் உள்ளார்.

பாலுச்சாமியுடன் ஏற்பட்ட பழக்கம் நெருக்கமாகியதால், இரத்தினம்மாளுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

ஆனால் பாலுச்சாமிக்கு அப்பு மீது ஏதோ கோபம், வெறுப்பில் இருந்த பாலுச்சாமி அந்த சிறுவனை சொந்த ஊரான எடையாருக்கு அழைத்துச் சென்று கல்லால் அடித்து கொலை செய்து விட்டு, ஆற்றங்கரையில் புதைத்துள்ளார்.

அதன் பின் எடையாரிலே மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் சுற்றுத் திரிந்துள்ளார். சிறுவன் அப்புவை கொலை செய்தது பாலுச்சாமி தான் என்ற தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் அவரை உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit