குழந்தையின் அழுகையை நிறுத்த தாய் செய்த செயல்: பரிதாபமாய் இறந்த குழந்தை

பிறப்பு : - இறப்பு :

பிரான்ஸில் 13 மாத குழந்தையின் அழுகையை நிறுத்த பெற்றோர் செய்த செயலால் குழந்தை மரணமடைந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Champagné நகரில் வசித்து வரும் டெல்பிம்(27)- சிரில்(43), கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சம்பவ தினத்தன்று 13 மாத குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக Wine ரக மதுபானத்தை ஊட்டியுள்ளனர்.

இதனால் மயக்கமடைந்த குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது குழந்தை கோமா நிலையில் இருந்துள்ளது.

பின்னர் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து போனது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் உடலில் நச்சுப்பொருட்கள் கலந்திருந்ததை கண்டறிந்தனர்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள் பெரியவர்களுக்கு வழங்கும் நச்சுப்பொருட்களுக்கு இணையான அளவு குழந்தையின் உடலில் இருந்துள்ளது.

இதனையடுத்து குழந்தையின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில் உண்மைகள் வெளிவந்தன, தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மற்றொரு மூன்று வயது குழந்தைக்கும் Wine ரக மதுவை கொடுத்தது தெரியவந்தது.

குழந்தையை திட்டமிட்டு கொல்லவில்லை என்ற போதிலும், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் அதிகபட்ச தண்டனை வழங்கப்படலாம் என தெரிகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit