ஏறாவூர் – தக்வா நகர், தாமரைக்கேணியைச் சேர்ந்த 16 வயதான மாணவன் மாயம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஏறாவூர் – தக்வா நகர், தாமரைக்கேணியைச் சேர்ந்த 16 வயதான மாணவன் ஒருவர் காணாமல் போயிருப்பதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாமரைக்கேணியைச் சேர்ந்த 16 வயதான ஆப்தீன் முகம்மது அப்ரீன் என்பவரே காணாமல் போயுள்ளதாக அவரது தந்தை முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் தந்தை குறிப்பிடுகையில்,

“பாடசாலைக் கல்வியில் ஆர்வம் குன்றியிருந்த நிலையில் மார்க்கக் கல்வி கற்கும் உத்தேசத்தில் கல்முனை கடற்கரைப் பகுதியிலுள்ள ஜாமியா மஹ்பூழ் ஹிதாயா அறபிக் கல்லூரியில் சேர்ப்பிக்கப்பட்டு அங்கு கடந்த 3 வருடங்களாக அல்குர் ஆன் ஓதற் பயிற்சி வகுப்புக்களில் பங்குபற்றி வந்தார்.

குறித்த படிப்பை இடைநிறுத்திவிட்டு கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வீட்டுக்கு வந்துவிட்டார்.

எனினும் கூடாத நண்பர்களின் சகவாசம் அவதானிக்கப்பட்டதால் சீர்திருத்திக் கொள்வதற்காக ஏறாவூர் ஸுபி மன்ஸில் மார்க்கக் கல்வி நிலையத்தில் அவரை சேர்ப்பித்தேன்.

ஆனால், அவருக்கு அங்கும் கற்பதில் ஆர்வம் இருக்கவில்லை. ஒழுக்க நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் இல்லையேல் பொலிஸார் மூலமாக சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் சேர்ப்பிப்பேன் என்றும் பலமுறை எச்சரித்தேன்.

இந்த நிலையில் இவர் கடந்த சில வாரங்களாக காணாமல் போயுள்ளார்.

இவருடைய தாய் பொருளாதார கஷ்ட நிலை காரணமாக குவைத் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்கின்றார். நான் மர ஆலையில் தொழில் செய்கின்றேன்.” என்றார்.

மேலும், மாணவன் காணாமல்போன சம்பவம் பற்றி தாம் பல கோணங்களில் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*