ராணுவத்தில் திருநங்கைகளுக்கு அனுமதி; புதிய வரலாறு படைக்கும் அமெரிக்கா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்க அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

உலகம் முழுவதும் மூன்றாம் பாலினத்தவர்கள் ஒதுக்கப்பட்டவர்களாக, சலுகைகள் மறுக்கப்பட்டவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் நிலையை உயர்த்த பல்வேறு நாட்டு அரசுகளும் உதவிபுரிந்து வருகின்றன. இந்தியாவிலும் கூட கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மூன்றாம் பாலினத்தவர்கள் இடம்பெறத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் முப்படைகளில் சேர மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அமெரிக்காவின் டிரம்ப் அரசு அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக ஒபாமா காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன.

அவற்றில் முப்படை பணிகளில் சேருவதற்கான அனுமதியை டிரம்ப் அரசு நீக்கியது. இதனை எதிர்த்து, நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், சாதகமான தீர்ப்பு கிடைத்தது.

இதனால் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முப்படைகளில் அனுமதி வழங்க டிரம்ப் அரசு அனுமதி அளித்தது.

இவர்கள் 2018ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் பணியில் சேர்க்கப்படுவர் என்று பெண்டகன் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*