சிறுவனின் தலையை பதம் பார்த்த பந்து: வீராங்கனையின் நெகிழ்ச்சி செயல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-500-560-350-160-300-053-800-748-160-70-16

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை அடித்த பந்து, ரசிகர்கள் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுவனின் தலையில் பட்டதால், ஆட்டத்தினை சிறிது நேரம் அவர் நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் பிரபலமான மகளிர் பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

சிட்னி சிக்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, சிட்னி அணியின் எல்லைசி பெர்ரி அடித்த பந்து, ரசிகர்கள் பகுதியில் அமர்ந்திருந்த 9 வயது சிறுவனின் தலையை பதம் பார்த்தது.

இதில் சிறுவன் சுருண்டு விழவே, உடனடியாக போட்டியை நிறுத்திய எல்லைசி, களத்தின் எல்லைப் பகுதிக்கு ஓடிச் சென்றார்.

தொடர்ந்து மருத்துவர்கள் முதலுதவி அளித்த பின்னர், சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதன்காரணமாக போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது, இந்த வீடியோ காட்சிகள் ட்விட்டரில் வெளியான நிலையில், எல்லைசியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இப்போட்டியில் எல்லைசி ஆட்டமிழக்காமல் 91 ஒட்டங்கள் எடுத்து தமது அணியை வெற்றிபெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit