இலங்கையின் சாதனையை டோனி தடுத்துவிட்டார்..எங்கள் திட்டம் எல்லாம் போச்சு: புலம்பும் லக்மல்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

suranka-lakmal

டோனியால் நாங்கள் போட்டியிருந்த திட்டம் அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டதாக, இலங்கை அணியின் பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் தெரிவித்துள்ளார்.

தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணியை, இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் ஆட்டம் காண வைத்தனர்.

அதிலும் குறிப்பாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான சுரங்கா லக்மல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

இந்நிலையில் சுரங்கா லக்மல், இந்திய அணி 29 ஓட்டங்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக் கொண்டிருந்தது.

இதனால் நாங்கள் இந்தியாவை 40 ஓட்டங்களுக்குள் சுருட்டி விடுவோம் என்று நினைத்தோம், அப்படி நடந்திருந்தால் அது இலங்கைக்கு ஒரு சாதனையாக மாறியிருக்கும்.

ஆனால் நாங்கள் நினைத்திருந்த நேரத்தில் டோனி சிறப்பாக ஆடினார். டோனியை மட்டும் விரைவில் வெளியேற்றியிருந்தால், நாங்கள் இந்தியாவை மிக மோசமாக சுருட்டியிருப்போம்.

டோனி ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். இதற்கு முன்பும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் அவர் பல முறை சிறப்பாக விளையாடியுள்ளார். எனவே டோனியால் எங்கள் கனவு தகர்க்கப்பட்டது என்று கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit