தூங்கினால் உடலில் எந்த பாகமும் செயல்படாது: 10 வயது சிறுவனுக்கு வந்த விசித்திர நோய்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரித்தானியாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் அரியவகை நோயின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவனை காப்பாற்றுவதற்காக பெற்றோர் போராடி வருகின்றனர்.

பிரித்தானியாவின் West Yorks பகுதியில் இருக்கும் Huddersfield பகுதியைச் சேர்ந்தவர் Justin. இவருக்கு பத்து வயதில் Benji என்ற மகன் உள்ளார்.

Benji அரியவகை நோயின் தாக்கம் காரணமாக மிகவும் அவதிப்பட்டு வருகிறார். பிரித்தானியாவில் 60 பேர் மட்டுமே இந்த நோயின் தாக்கம் காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அதவாது Benji -க்கு congenital central hypoventilation syndrome என்ற நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தூங்கினால் அவர்களின் மூளையும் தூங்கிவிடும், மூளை தூங்கிவிட்டால், உடலில் உள்ள அனைத்து பாகங்களும் வேலை செய்யாமல் நின்று விடும் அப்படி நின்றுவிட்டால், இறக்க நேரிடும்.

இது போன்ற நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தூங்கும் போது, அவர்களின் உடலின் பாகம் மெஷின் மூலம் இயக்கப்படும், அதன் பின் அவர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டால், மெஷினின் உதவி தேவைப்படாது.

இப்படி மெஷினின் உதவி மூலம் உயிர் வாழ்ந்து வரும் Benji திடீரென்று மெஷினில் பிரச்சனை ஏற்பட்டு, மெஷின் வேலை செய்யாமல் போய்விட்டால், அவன் இறக்க நேரிடும், இதனால் அவனது பெற்றோர் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அவன் தூங்கும் போது கவனித்து வருகின்றனர்.

இது குறித்து Benji-யின் தந்தை Justin கூறுகையில், அவனுக்கு stem cell சிகிச்சை அளிக்க வேண்டும், அந்த சிகிச்சை அளித்தால், அவன் முன்னேற்றம் அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது, இந்த சிகிச்சை அளிக்க சுவிட்சர்லாந்தில் உள்ள மருத்துவமனை ஒப்புக் கொண்டுள்ளது.

625-0-560-350-160-300-053-800-668-160-90-10

அதற்கு £20,000 தேவைப்படுகிறது, இதனால் எங்கள் மகனை காப்பாற்ற நிதியுதவி திரட்டி வருகிறோம், தற்போது வரை £16,000 நிதி திரட்டிவிட்டோம், இன்னும் மீதி தொகைக்காக காத்திருக்கிறோம், அடுத்த ஈஸ்டர் வருவதற்குள் எங்கள் மகனிற்கு சிகிச்சை அளித்து, அவனை காப்பாற்றிவிடுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*