எம்.எல்.ஏ. முன்னிலையில் நடந்த முத்தமிடும் போட்டி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஜார்க்கண்டில் பழங்குடியின விழாவில் தம்பதிகள் முத்தமிடும் போட்டியை எம்.எல்.ஏ. நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூரின் லிட்டிபாரா என்ற பகுதியில் பழங்குடியினர் கொண்டாடும் திருவிழா நடந்தது. இந்த விழாவில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. சைமன் மராண்டி பங்கேற்றார்.

இதில் பழங்குடியினர் தம்பதிகளுக்கிடையே முத்தமிடும் போட்டி நடந்தது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக இந்த விழா ஏற்பாடு செய்த எம்.எல்.ஏ. சைமன் மாராண்டியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்து மராண்டி கூறுகையில், இது ஆண்டு தோறும் நடக்கும் வழக்கமான விழா. தம்பதியினர் முத்தமிட்டுக்கொள்வதால் அவர்களுக்குள் பரஸ்பரம் அன்பு ஏற்படும். விவகாரத்து நடக்க வாய்ப்பிருக்காது.’ என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*