பாலியல் வல்லுறவுக்கு இரையாகும் சிறுமிகள்: வெளியான ஆய்வறிக்கை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

child-abuse

இந்தியாவில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிறுமிகள் என 2016ஆம் ஆண்டுக்கான தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அதில், 6 வயதுக்குக் கீழுள்ள 1.3 சதவிகித சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உள்ளனர். 6 முதல் 12 வயது வரையுள்ள 4.1 சதவிகித சிறுமிகளும்,

12 முதல் 16 வயது வரையுள்ள 15.6 சதவிகித சிறுமிகளும், 16 முதல் 18 வயது வரையுள்ள 22.2 சதவிகித சிறுமிகளும், 18 முதல் 30 வயது வரையுள்ள 42.1 சதவிகித பெண்களும்,

30 முதல் 35 வயது வரையுள்ள 13.3 சதவிகித பெண்களும், 45 முதல் 60 வயது வரையுள்ள 1.3 பெண்களும், 60 வயதுக்கு மேலுள்ள 0.1 சதவிகித பெண்களும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உள்ளனர்.

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 94.6% பேர், அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களால் அந்தக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி 27.0 சதவிகிதம் பேர் பக்கத்து வீட்டுக்காரர்களாலும், 25.9 சதவிகிதம் பேர் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியதாலும், 8.4 சதவிகித பேர் உறவினர்களாலும் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

1.5 சதவிகிதம் பேர் முதலாளிகளாலும், உடன் வேலை செய்பவர்களாலும், 1.6 சதவிகித பேர் தாத்தா அல்லது தந்தை, அல்லது சகோதர் அல்லது மகனால் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit