இந்து கோவில் அருகில் வர மறுக்கும் எரிமலை குழம்பு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தோனேசியாவின் பாலித் தீவின் காலநிலையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பது அகுங் எரிமலை.

உலகில் சீற்றம் மிகுந்த எரிமலைகளுள் ஒன்றாகக் கருதப்படும் அகுங், வரலாற்றில் பல முறை எரிமலைக் குழம்புகளையும் சாம்பலையும் கக்கியிருக்கிறது.

1843-ஆம் ஆண்டு இதன் சீற்றம் முதல் முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 1963-ஆம் ஆண்டு மிகக் கடுமையான சீற்றம் காரணமாக லாவா குழம்புகள் சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வீசப்பட்டது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். பல கிராமங்கள் சாம்பலாகின. ஆயினும் மலைச் சரிவில் இருந்த கோயிலுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை.

கோயிலின் சில அடி தொலைவு வரை லாவா குழம்புகள் வந்த நிலையில், கோயிலுக்கு எதுவும் ஆகவில்லை என்பதை பாலி மக்கள் கடவுளின் கருணை என்று கொண்டாடினார்கள்.

தற்போது மீண்டும் சீறிக் கொண்டிருக்கிறது அகுங் எரிமலை. செப்டம்பர் மாதத்தில் சுமார் 850 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. இரண்டு மாதங்கள் கழித்து நவம்பர் 25-ஆம் தேதி எரிமலைக் குழம்பு வெளியேறத் தொடங்கியது.

ஆரஞ்சு நிறத் தீக்குழம்புகள், கரும்புகை, சாம்பல் ஆகியவை பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தின. சுமார் 30,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

தீவின் பெரும்பகுதி புகை மண்டலமாகக் காட்சியளிப்பதால், இயல்பு நிலை திரும்புவதற்குப் பல மாதங்கள் ஆகலாம் எனக் கருதப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*