நியூயோர்க்க நகரில் தீவிரவாத தாக்குதல் முயற்சி! மூவருக்கு காயம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நியூயோர்க்கின் மான்ஹாட்டனில் உள்ள ஒரு பேருந்து முனையத்தில் தீவிரவாதத் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“பயங்கரவாதிகள் ஜெயிக்க முடியாது. நாங்கள் நியூயோர்க்வாசிகள்” என்று பேருந்து முனையத்தில் ஏற்பட்ட வெடிச் சம்பவத்துக்குப் பிறகு நியூயோர்க் மேயர் பில் டி பிளேசியோ தெரிவித்தார்.

திங்கட்கிழமை காலை, டைம்ஸ் ஸ்கொயர் அருகே உள்ள துறைமுக ஆணைய பேருந்து முனையத்தில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

அகாயத் உல்லா என்ற 27 வயது நபர், குறைந்த தொழில்நுட்பம் கொண்ட வெடிக்கும் கருவிகளை தன் உடலில் சுற்றியிருந்த நிலையில், மக்கள் நெரிசலுக்கு இடையில் அதை வெடிக்கச் செய்தபோது அவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படத்தில், சந்தேகத்துக்குரியவராகக் கருதப்படும் நபர், துணிகள் கிழிந்து சிதறி, காயங்களுடன் தரையில் கிடப்பதையும், அவரது உடலில் வயர்கள் சுற்றப்பட்டிருப்பதையும் காண முடிகிறது.

அந்த நபர் தனியாக செயல்பட்டிருப்பதாக நம்புவதாக மேயர் தெரிவித்துள்ளார்.

”42ஆவது தெரு, 8ஆவது அவென்யூ, மான்ஹாட்டனில் ஏற்பட்ட காரணம் அறியப்படாத தீ விபத்து சம்பவத்திற்கு நியூயோர்க் நகர போலீசார் தக்க நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்” என்று நியூயோர்க் காவல் துறை ட்வீட் செய்துள்ளது.

பேருந்து முனையத்தில் தரைத்தளத்தில் உள்ளச சுரங்கப்பாதையில் குழாய் வெடிகுண்டு வெடிக்கப்பட்டிருக்கலாம் என்று ABC செய்திகள் கூறுகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக அதிபர் டிரம்பிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை ஊடகத் தொடர்பாளர் சாரா சான்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

துறைமுக ஆணைய பேருந்து முனையம், ஓர் ஆண்டிற்கு 65 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் அமெரிக்காவின் மிகப்பெரிய பேருந்து முனையம் ஆகும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*