2018ல் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகாிக்கும்!! விஞ்ஞானிகள் எச்சாிக்கை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதால் 2018ம் ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அமொிக்க விஞ்ஞானிகள் எச்சாிக்கை தொிவித்துள்ளனா்.

அமொிக்காவின் கொலரடோ பௌல்டா் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வாளா் ரோஜா் பில்ஹாம் மே்றகொண்ட ஆய்வில் கிடைத்திருக்கக்கூடிய தகவலும், ரெபேக்கா பென்டிக் பல்கலைக்கழகத்தின் மொன்டானா ஆராய்ச்சிகளும், வரும் ஆண்டில் நிலநடுக்கத்தின் தாக்கம் பற்றி எடுத்துரைக்கின்றன.

அமொிக்க விஞ்ஞானிகள் இது குறித்து கூறுகையில், பூமியின் சுழற்சி வேகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக நிலநடுக்கங்கள் அதிகாிக்க வாய்ப்புள்ளது.

அதாவது பூமியின் சுழற்சி வேகத்தில் மிக மிகக் குறைந்த அளவில் (ஒரு நாளில் ஒரு மில்லியன் செகண்ட்) மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பூமிக்கு கீழேயான ஆற்றல் அதிகாிக்கிறது என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.

குறிப்பாக, இந்திய நிலப்பரப்பின் கீழ் இருக்கும் பூமித் தட்டு சிறிது சிறிதாக ஐரோப்பிய நிலப்பரப்பின் கீழ் இருக்கும் தட்டுகளுக்குக் கீழ் நோக்கி நகர்ந்து வருகிறது. இது ஆண்டுக்கு 47 மி.மீ. என்ற அளவில் நிகழ்கிறது.

இந்த காரணங்களால், பூமிக்குக் கீழ் ஏற்படும் அதிகப்படியான ஆற்றல் காரணமாக பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

கடைசியாக 2011ம் ஆண்டில் பூமியின் சுழற்சி வேகத்தில் மிகச் சிறிய மாற்றம் ஏற்பட்டு, பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அடுத்தாக இது 2016 அல்லது 2017ல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2017ல் இதுவரை எந்த பெரிய நிலநடுக்கமும் தாக்கவில்லை என்பதால், 2018 அதிகம் கவனிக்கப்பட வேண்டியதாகியுள்ளது.

அடுத்த ஆண்டில் உலக அளவில் குறிப்பிடத்தக்க வகையில் நிலநடுக்கம் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, 2017ல் மிகப் பெரிய நிலநடுக்கங்கள் என்று 6 நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. ஆனால் 2018ல் இது 20 ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சுரங்கம் வெட்டுதல், அணு ஆயுதச் சோதனை, நிலத்தடி நீரை அளவுக்கு அதிகமாக உறுஞ்சுதல் போன்ற மனிதன் செய்யும் இயற்கைக்கு எதிரான செயல்களும் கூட நிலநடுக்கங்களுக்குக் காரணமாக அமைகின்றன.

முந்தைய 149 ஆண்டுகளில் சுமார் 728 நிலநடுக்கங்கள் மனிதனின் தவறான நடவடிக்கைகளால் ஏற்பட்டவையே என்று புள்ளி விவரம் சொல்கிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*