வாயை பிளக்க வைக்கும் கண்டுபிடிப்பு? சீனாவில் கண்ணுக்கு புலப்படாமல் ஆளையே மறைக்கு ஆடை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சீனாவில் நபர் ஒருவர் ஆளையே மறைக்கு ஆடை அணிந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

சீனாவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கிரிமினல் புலனாய்வு பிரிவு துணைத்தலைவரான Chen Shiqu என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 4-ஆம் திகதி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவிட்டிருந்தார்.

அதில் அணிந்திருக்கும் உடை quantum of invisibility cloak எனவும் குவாண்டம் தொழில்நுட்பம் முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆடை, கண்டிப்பாக இராணுவத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், வரும் நபர் மரம், புதர்களுக்கு நடுவே படிக்கட்டுகளில் நடந்து வருகிறார். பெரிய சைஸ் பாலிதீன் கவர் போன்ற ஒன்றை எடுத்து விரிக்கிறார்.

அப்போது பார்த்தால், பாலிதீன் கவர் மறைத்த அந்த நபரின் உடல் பகுதிகள் தெரியவில்லை. அவருக்கு பின்னால் உள்ள மரம், செடி, புதர்கள் மட்டும் தெரிகின்றன.

அதன் பின் கழுத்துக்கு கீழ் பாலிதீன் கவரை அவர் பிடிக்க, தலைமட்டும் தெரிகிறது. பாலிதீன் கவரை வைத்து 360 டிகிரியில் சுற்றுகிறார். சரியாக அந்த கவர் மறைக்கும் உடல் பகுதிகள் மட்டும் தெரியவில்லை.

தற்போது இந்த வீடியோவை 21.4 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

ஆனால் வீடியோ எடிட்டிங் நிபுணர்களோ,quantum of invisibility cloak ஆடைக்கு வாய்ப்பே இல்லை எனவும், இதை அவர்கள் நன்றாக எடிட்டிங் செய்து, புரளியை கிளப்பி விடுகின்றனர் என்று கூறியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*