காரைதீவின் ஒற்றுமை கருதி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தேர்தலில் போட்டியிடாது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

காரைதீவு பிரதேசசபைக்கான தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டியிடப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான குறித்த கட்சி, ஊர் மக்களின் தீர்மானத்திற்கு மதிப்பளித்து இந்த முடிவினை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த கட்சியின் காரைதீவுப் பிரதேச அமைப்பாளர் கே.குமாரசிறி கருத்து வெளியிடும்போது,

கட்சி தலைமை எந்த அரசியல் அதிகாரத்திற்கும் ஆசைப்பட்டதல்ல. என்னால் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெறா விட்டாலும் கணிசமான வாக்குகளை பிரிக்க முடியும்.

அந்த துரோகத்தை என் மண்ணுக்காக செய்யவில்லை. நான் எனது சமூகத்தை மதித்து நடப்பவன். எமது தலைவர் பிள்ளையான் காரைதீவு மண்ணில் பற்றுள்ளவர் என்பதனை பலமுறை நிரூபித்துள்ளார்.

எனது வேண்டுகோளையும் ஏற்று இம்மண்ணின் இறைமைக்கு ஆதரவாக முடிவெடுத்துள்ளார். மற்றைய அரசியல் கட்சிகளுக்கு இதுவே உதாரணம் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் குறித்த கட்சியின் பொதுச்செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி திருக்கோவில் ஆலையடிவேம்பு நாவிதன்வெளி பிரதேசசபைக்கான கட்டுப்பணத்தினை செலுத்தியிருந்தது.

காரைதீவு பிரதேசத்தில் அங்குள்ள பொது அமைப்புகள் இணைந்து எடுத்துள்ள தீர்மானத்திற்கு அமைவாகவும் அப்பகுதியில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தனின் அறிவுறுத்தலுக்கு அமைய காரைதீவு பிரதேசசபையில் போட்டியிடவில்லை.

ஏனைய பகுதிகளில் தனித்துவமாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி போட்டியிடுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*