பாலியல் தொல்லைக்கு இரையாகும் பிரித்தானிய பெண்கள்: வெளியான ஆய்வறிக்கை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரித்தானியாவில் வேலைக்கு செல்லும் பெண்களில் 5-ல் 2 பேர் பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு இரையாவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பாதிக்கப்படும் பெண்களில் நான்கில் ஒருபகுதி பேர் மட்டுமே புகார் அளிக்க முன்வருவதாகவும் குறித்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆண்களை பொறுத்தமட்டில் இந்த விகிதம் மிக குறைவாக உள்ளதாகவும், அவர்களில் 5-ல் ஒருவருக்கு பாலியல் தொல்லை இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

பெரும்பாலும் பாலியல் சீண்டல்களுக்கு இரையாகும் பெண்களில் சுயமாக தொழில் செய்பவர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் என குறிப்பிட்ட பணி நேரம் என இல்லாதவர்களுக்கே அதிக பாதிப்பு என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது ஒட்டுமொத்தமாக 43 விழுக்காடு எனவும் கூறப்படுகிறது.

உணவகங்களில் பணிபுரியும் பெண்கள் பெருமளவில் பாலியல் சீண்டல்களுக்கு இரையாகின்றனர். மட்டுமின்றி வலுக்கட்டாயமான பாலியல் தீண்டல்களுக்கு 10-ல் 4 பெண்கள் இரையாவதாகவும், இது ஆண்களில் 10-ல் இரண்டு பேர் என உள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி பேருந்துகளில், மது விடுதிகளில், பொதுவான கூடுகைகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் பிரித்தானியாவில் அதிகரித்துவருவதை குறித்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பாலியல் சீண்டல்கள் தொடர்பாக வெளிவரும் உண்மைகள் தொடர்புடைய நபர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் கொண்டுவரும் என கருதவில்லை என குறித்த ஆய்வில் பெண்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.625-0-560-350-160-300-053-800-668-160-90-6

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*