உறவினரிடம் தர்ம அடி வாங்கிய கொடூரன் தஷ்வந் !

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

thasvanth26546

நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்துவதற்காக பொலிசார் தஷ்வந்தை அழைத்துச் சென்றபோது, அவன் மீது உறவினர்கள் சிலர் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர்.

சிறுமி ஹாசினி மற்றும் தாய் சரளாவை கொன்ற கொடூரன் தஷ்வந்தை பொலிசார் மும்பையில் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

பொலிசார் தஷ்வந்திடம் நடத்திய விசாரணையில் தாயை தொடர்ந்து, தந்தையையும் கொல்ல திட்டமிட்டது தெரியவந்தது

இந்நிலையில், செங்கல்பட்டில் உள்ள நீதிமன்ற நீதிபதி சச்சிதானந்தம் முன்னிலையில், தஷ்வந்தை பொலிசார் ஆஜர்படுத்தினர்.

அப்போது, வரும் 22-ம் திகதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கபட்டான்.

முன்னதாக நீதிபதி வீட்டுக்கு பொலிசார் தஷ்வந்தை அழைத்துச் சென்றபோது, அவனது உறவினர்கள் சிலர் தஷ்வந்தை தாக்கினார்கள்.

இதைடுத்து தாக்குதலில் ஈடுபட்ட தியாகு என்ற உறவினரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit