
பாரீஸ் சாலையில் தூங்கும் அகதிகளை அரசு ஜனவரி 1-ஆம் திகதிக்குள் அப்பறப்படுத்தாவிட்டால் உண்ணாவிரத போரட்டம் இருக்க போவதாக பாரீஸ் குடியிருப்பு வாசிகள் சங்கம் அறிவித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சாலை நடைபாதையில் ஆங்காங்கே அகதிகள் தங்கியுள்ளார்கள்,
இவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் செய்தி தொடர்பாளர் பிய்ரி வவ்ரின் கூறுகையில், சாலை நடைபாதையில் பலர் சிறுநீர் கழித்து அசுத்தம் செய்கிறார்கள்.
இதை தினமும் சுத்தம் செய்வதில்லை, இதன் காரணமாக சுற்றியிருக்கும் பகுதிகளில் வசிக்கும் சிலர் குறைந்த விலைக்கு தங்கள் அடுக்குமாடி வீட்டை விற்று விட்டு வேறு இடத்துக்கு சென்றுவிட்டார்கள்.
சாலையில் தூங்குபவர்களை ஜனவரி 1-ம் திகதிக்குள் வெளியேற்றாவிட்டால் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இந்தாண்டு இறுதிக்குள் சாலையில் வசிப்பவர்களை அப்புறப்படுத்துவோம் என முன்னர் கூறியது குறிப்பிடத்தக்கது.