நாயின் உணவை சாப்பிட்டு பசியாறினேன்: பணிப்பெண்ணின் கண்ணீர் கதை

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மரியா என்ற பெண்மணி வீட்டு வேலைக்காக சென்ற இடத்தில் தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து விவரித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மரியா என்ற பெண் கூறுகையில், பிரேசிலில் உள்ள வசதியான குடும்பத்தில் வேலை பார்ப்பதற்காக ஒப்பந்தமானேன்.

உடல்நலம் முடியாத எனது தாய், 3 பெண் குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு இருந்ததால், வீட்டு வேலை செய்ய முடிவுசெய்தேன்.

ஆனால், நான் பணியாற்றிய வீடு எனக்கு அதிக பணிகளை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அதிக சித்ரவதையையும் கொடுத்தனர்.

அவர்களின் குடியிருப்பு பெரியது என்பதால், அதிகாலையில் எழுந்து, 3 படுக்கையறைகள், பெரிய வளாகம், சமையலறைகள் அனைத்தையும் சுத்தம் செய்துவிடுவேன்.

அதனுடன் அவர்களின் பள்ளிக்குழந்தைகள் புறப்படுவதற்கு உதவி செய்வேன், குழந்தைகளுடன் சேர்ந்தது நாயையும் ஜாக்கிங் அழைத்து செல்ல வேண்டும். நான் சுத்தம் செய்யும் போது அந்த வீட்டின் முதலாளி என்னை கவனித்துக்கொண்டே இருப்பார்.

அப்படி நான் ஏதாவது சிறு தவறு செய்தால், ஒருவேளை உணவினை நிறுத்திவிடுவார்கள். இரவில் தாமதமாக தூங்க செல்லும் நான், அதிகாலையில் வெகுசீக்கிரமே கண்விழித்துக்கொள்ள வேண்டும். இதில், பசியால் தவிக்கும் எனக்கு உணவுகளையும் சரியாக வழங்கமாட்டார்கள்.

ஆனால், காலையில் பசியோடு கண்விழிக்கும் எனக்கு, அங்கு அளவுக்கு அதிகமான வேலைகளே காத்திருக்கும். ஆனால் எனது குடும்ப பொறுப்பினை தோளில் சுமந்திருந்ததால், இந்த கொடுமைகளை பொறுத்துக்கொண்டேன்.

வீட்டில் அனைவருக்கும் சமைத்த உணவுகளை அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னரே, நான் சாப்பிடவேண்டும். சில நேரங்களில் எனக்கு உணவு இருக்காது. பசியின் கொடுமை தாங்க முடியாமல் நாய்க்கு வைக்கும் உணவினை எடுத்து சாப்பிட்டு பசியாற்றிக்கொள்வேன்.

இப்படி சிரமப்படுவதற்கு எனது நாட்டிற்கே சென்று, அங்கு கிடைக்கும் வருவாயை வைத்து சந்தோஷமாக வாழலாம் என இங்கிருந்து செல்ல முயற்சித்தேன். ஆனால், அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை.

அவர்களது வீட்டில் யாரும் இல்லாதபோது தப்பித்துவிடலாம் என முடிவு செய்தேன், ஆனால் அவர்கள் என்னை உள்ளே வைத்து அனைத்து கதவு அறைகளையும் அடைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்.

சுமார் 15 மணிநேர போராட்டத்திற்கு பின்னர், வீட்டின் ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பித்தேன். வேலைக்கு வரும்போது இதுபோன்று பிரச்சனைகள் இருக்கும் என நான் எதிபார்க்கவில்லை, எனக்கு மாத ஊதியம் $600 கிடைக்கும் என நினைத்தேன்.

ஆனால், அனைத்தும் பொய்த்துவிட்டது என கூறியள்ளார், உலகின் மிக அதிகமான உள்நாட்டுத் தொழிலாளர்களை பிரேசில் நாடு கொண்டுள்ளது.

ஆறு மில்லியன் பிரேசிலியர்கள் மத்தியதர வர்க்க மற்றும் செல்வந்த குடும்பங்களில் வேலை செய்கின்றனர். இவர்கள் அதிகமான தொந்தரவுகளுக்கு ஆளாவதாக அரசாங்கம் எடுத்த கணக்கில் தெரியவந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*