இறந்துபோன சிறுமியின் உடலுக்கு ரூ.9 லட்சம் கேட்ட மருத்துவமனை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

625-500-560-350-160-300-053-800-748-160-70-6

டெல்லியில் இறந்த சிறுமியின் உடலை ஒப்படைக்க வேண்டுமென்றால் ரூ.9 லட்சம் செலுத்த வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் பெற்றோரிடம் தெரிவித்துள்ளது.

நீராஜ் என்பவர் தனது 9 வயது மகளை எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள பிஎல் கபூர் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

சில நாட்களில் அந்த சிறுமிக்கு உடல்நிலை மோசமடைந்ததுடன், சுவாசக்கோளாறுகள் மற்றும் கடும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திடீரென சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், இறந்த குழந்தையின் உடலை பெற வேண்டுமென்றால் ரூ.9 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறியது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்துவிட்டதாக குற்றம்சாட்டிய அவர்கள், இதுகுறித்து புகார் அளிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit