30 நொடிகளில் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற வேண்டுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மன அழுத்தமிக்க இன்றைய வாழ்க்கை முறையில் ஏராளமானோர் சரியான தூக்கம் கிடைக்காமல் அவஸ்தைப்பட்டு கொண்டிருக்கின்றனர். மனிதன் ஆரோக்கியமாக வாழ தூக்கம் மிகவும் அவசியமானது.

அந்த தூக்கம் சரியாக கிடைக்காவிட்டால், அதுவே உடலில் பல நோய்களை வரவழைக்கும். தூக்கத்தின் மூலம் தான் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கிறது.

இக்கட்டுரையில் 30 நொடிகளிலேயே ஆழ்ந்த உறக்கத்தைப் பெற சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து தெரிந்து, மனதில் கொண்டு பின்பற்றி நடந்தால், இரவு நேரத்தில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

புத்தகம் படி

இரவில் படுக்கையில் படுத்ததும் தூங்க வேண்டுமானால், படுக்கும் முன் சிறிது நேரம் புத்தகத்தைப் படியுங்கள். அதுவும் ஆர்வத்தைத் தூண்டும் புத்தகத்தைப் படிக்காமல், போர் அடிக்கும் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். இதனால் படுத்த உடனேயே தூங்கிவிடலாம்.

ஒரே நேரத்தில் உறங்குங்கள்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் தூங்காமல், தினமும் ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

இதனால் இரவு நேரத்தில் தினமும் தூங்கும் நேரம் வந்ததுமே தானாக தூங்கிவிடுவீர்கள். ஒரே நேரத்தில் தூங்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதால், மூளை செரடோனின் மற்றும் மெலடோனின் அளவை சரிசெய்து, தானாக தூக்கத்தைப் பெறச் செய்யும்.

ஆரோக்கியமான டயட்

ஆரோக்கியமான டயட்டை மேற்கொள்வதன் மூலம் படுத்ததும் தூக்கத்தைப் பெற முடியும். மேலும் ஆய்வுகளில் பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் சாப்பிட்டால் நல்ல தூக்கத்தைப் பெறலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிலும் வான் கோழி சாப்பிட்டால், அதில் உள்ள அதிகளவிலான ட்ரிப்டோ பேன் ஒருவித மயக்க உணர்வை உண்டாக்கி, நம்மை விரைவில் தூங்க வைக்கும்.

குளிர்ச்சியான அறை

இரவில் படுத்ததும் தூங்க வேண்டுமானால், படுக்கை அறையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். படுக்கை அறையை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதன் மூலம், உடல் வெப்பநிலை குறைந்து, சீக்கிரம் தூக்கத்தைப் பெற முடியும்.

கருப்பு நிற திரைச்சீலைகள்

படுக்கை அறையில் உள்ள ஜன்னல்களின் வழியே வெளிச்சம் வந்தால், அங்கு கருப்பு நிற திரைச்சீலைகளை வாங்கி தொங்கவிடுங்கள். இதனால் அந்த அறை முழுவதும் இருட்டாக இருப்பதுடன், படுத்ததுமே துங்கிவிடலாம். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*