இரு புறமும் டுவல் கமெரா வசதியுடன் அறிமுகமாகும் Huawei Nova 2S

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் தனக்கென ஒரு இடத்தை Huawei நிறுவனம் தக்கவைத்துள்ளது.

உயர் தொழில்நுட்பங்களைக் கொண்ட கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் இந் நிறுவனம் Huawei Nova 2S எனும் மற்றுமொரு ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இக் கைப்பேசியானது 6 அங்குல அளவு, 2160 x 1080 Pixel Resolution உடைய FHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் இரு பதிப்புக்களாக வெளிவரவுள்ள இக் கைப்பேசி Kirin 960 Processor ஐ கொண்டிருப்பதுடன் அவற்றுள் ஒன்று பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகத்தினையும், மற்றையது 6GB RAM, 64GB அல்லது 128GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டதாக காணப்படுகின்றது.

மேலும் வீடியோ அழைப்புக்கள் மற்றும் செல்ஃபி என்பவற்றிற்காக 2 மெகாபிக்சல்கள், 20 மெகாபிக்சல்களைக் கொண்ட முன்புற கமெரா, தலா 20 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெராக்கள் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.

4GB RAM கொண்ட கைப்பேசியின் விலை 410 டொலர்களாகவும், 6GB RAM கொண்ட கைப்பேசியின் விலை 530 டொலர்களாகவும் அமைந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*