இலங்கையுடன் படுதோல்வி: இந்தியாவுக்கு நம்பர் 1 இடத்துக்கான வாய்ப்பு பறிபோனது

பிறப்பு : - இறப்பு :

இலங்கை அணியுடன் தோல்வி அடைந்ததால் தரவரிசை பட்டியலில் இந்தியா நம்பர் 1 இடத்தை பிடிக்கும் வாய்ப்பு நழுவிப்போய் விட்டது.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி தற்போது இரண்டாமிடத்தில் உள்ளது.

இலங்கை – இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக இந்தியா வென்றால் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முடியும் என்ற நிலைமை காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதையடுத்து ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடிக்க நினைத்திருந்த இந்திய அணியின் பொன்னான வாய்ப்பு தற்போது நழுவிப்போய் விட்டது.

அடுத்து இலங்கைக்கு எதிராக நடக்கவுள்ள மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வென்றால் கூட இந்தியா முதலிடத்தை பிடிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit