விமானத்தில் குடிகார பெண் போதையில் செய்த கூத்து !

பிறப்பு : - இறப்பு :

கூடுதலாக மது வேண்டும் என விமானத்தில் அதிகாரிகளிடம் சுவிஸ் பெண் சண்டையிட்ட நிலையில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோ நகரிலிருந்து A320 ரக பயணிகள் ஜெட் விமானம் சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

விமானத்தில் இருந்த 44 வயதான சுவிஸ் பெண் பயணி ஏற்கனவே விமானத்தில் தரப்பட்ட மதுவை அருந்திய நிலையில் இன்னும் கூடுதலாக மது வேண்டும் என ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.

ஆனால் ஊழியர்கள் தர மறுக்கவே அவர்களுடன் போதையில் சண்டை போட்டுள்ளார். பயணியை சமாதானப்படுத்த முயன்றும் அது முடியாததால் விமானத்தை பாதி வழியிலேயே ஜேர்மனியின் ஸ்டுட்கார்ட் விமான நிலையத்தில் விமானி நிறுத்தினார்.

இதையடுத்து பொலிசார் குறித்த பயணியிடம் விசாரணை நடத்தி அவர் மீண்டும் அந்த விமானத்தில் பயணம் செய்ய 5000 யூரோ பணத்தை அபராதமாக கட்டும் படி உத்தரவிட்டார்கள்.

இதனிடையில், திட்டமிடாமல் திடீரென விமானத்தை நிறுத்தியதால் கூடுதலாக சில ஆயிரம் யூரோ செலவு ஏற்படும் என தெரியவந்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit