வேலை செய்வதற்கு உகந்த இடம் முகநூல் – கிளாஸ்டோர் ஆய்வில் முடிவு

பிறப்பு : - இறப்பு :

அமெரிக்காவின் முன்னணி வேலைவாய்ப்பு இணையதளமான கிளாஸ்டோர் நடத்திய ஆய்வறிக்கையில் அமெரிக்காவில் வேலை செய்வதற்கு உகந்த 100 இடங்களுக்கான பட்டியலில், உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான முகநூல் முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனமான பெயின் ரூ ஏம்ப், பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. பாஸ்டன்(Boston), இன்-என்-அவுட் பர்கர்(In-n-out burger) கூகுள் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

அமெரிக்காவின் மற்றொரு முன்னணி நிறுவனமான அப்பிள் நிறுவனமானது இந்தப் பட்டியலில் பெரும் பின்னடைவைச் சந்தித்து 84ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டில் 36ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால் கூகுள்(Google), வேல்ர்டு வைடு டெக்னாலஜி(World Wide Technology), யாகூ(Yahoo) மற்றும் வி.எம்.வேர்(Viemver) போன்ற மற்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளன.

இந்த ஆய்வறிக்கை குறித்து கிளாஸ்டோர் தலைமை நிர்வாக அதிகாரி ரோபர்ட் ஹோஹ்மன் கூறுகையில்

‘முகநூல் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அவர்கள் பணியை மிகவும் விரும்புகின்றனர். உலகின் பில்லியன் கணக்கான மக்களுடைய வாழ்க்கையை வெளிப்படுத்தும் தளம், நிறுவனத்தின் கலாசாரம், வெளிப்படையான தலைமை ஆகியவையே அதற்குக் காரணமாக உள்ளது.

அப்பிள் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அதன் பணியை வெகுவாக விரும்பவில்லை’ என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit