மட்டக்களப்பில் 31 எயிட்ஸ் நோயாளிகள்!

பிறப்பு : - இறப்பு :

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு டிசெம்பர் மாதம் வரை 31 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை, மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய், எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு பொறுப்பு வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் வெளியிட்டுள்ளார்.

இது பற்றி மேலும் தெரிவித்த அவர்,

“மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 31 பேர் எயிட்ஸ் நோய்க்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்களில் 26 பேர் கொழும்பிலும் 2 பெண்கள், 3 ஆண்கள் உட்பட 5 பேர் மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய், எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் நேரடிக் கண்காணிப்பில் மட்டக்களப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

“இந்த 31 பேரிலும் அரைவாசிக்கும் அதிகமானோர் ஆண்கள் என்பதும் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான இவர்களில் 90 சதவீதம் பெரும்பாலும் வெளியிடங்களிலிருந்தே தொற்றுக்குள்ளாகியிருக்கின்றார்கள் என்பதும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit