சவுதியில் கைது செய்யப்பட்ட 1,60,000 பேர்: என்ன காரணம்?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

soudi-polis

சவுதியில் பல்வேறு சட்டமீறல்கள் தொடர்பாக கிட்டத்தட்ட 1,60,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாட்டின் பொது பாதுகாப்பு இயக்குனரின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

இதில் வசிப்பிட கட்டுபாடுகளை மீறியதாக 89,651 பேரும், தொழிலாளர் சட்டத்தை மீறியதாக 45,063 பேரும், எல்லை பாதுகாப்பு அமைப்பு கட்டுபாடுகளை மீறியதாக 24,693 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக நாட்டின் எல்லையை கடக்க முயன்ற 1,838 பேர் தனி பிரிவில் கைதாகியுள்ளனர்.

இவர்களில் 78 சதவீதம் பேர் ஏமனை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 21 சதவீதம் பேர் இதியோபியா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் 1 சதவீதம் மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இது போன்ற சட்டத்தை மீறிய செயல்களில் சம்மந்தப்பட்டவர்களுக்கு உதவியதாக 426 பேர் கைதாகியுள்ளனர்.

பெரும்பாலான குற்றங்கள் தங்கள் விசாக்களை தாண்டி சட்டவிரோதமாக நாட்டில் வசித்து வருபவர்களால் தான் அரங்கேறுகிறது என பொலிசார் கூறியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit