இலங்கையில் பல்சமய இல்லம் – (படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

palsamayavila-2

நல்லிணக்கம் என்ற பெயருக்கு பின் உள்ள திரைமறைவு நகர்வுகளை இட்டு தமிழ்மக்களுக்கு அனுபவரீதியான பயம் வரலாறு கற்பித்த பாடமாக அமைந்துள்ளது.

இருதரப்புக்களிடையில் இல்லது பல்தரப்புக்களிடையில் முரண்பாடு, அல்லது வாழமுடியாத சூழல் எக்காரணத்தால் ஏற்பட்டாலும் அதனைத் தீர்த்து வைத்தல் என்பது, வெறுமனே அரசியலில் மட்டும் தங்கியில்லை.
ஒருவழிப்பாதையில் சென்று திரும்பமுடியா நிலையில் பல பேச்சுவார்த்தைகள் அர்தமற்றுப்போய் உள்ளன. பலமாக இருந்தபோது பேச அழைத்து பின் சூழச்சிகளால் பலவீனப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்பட்ட வரலாறும் எம்மைக் கடந்து சென்றுள்ளது.

அதேநேரம் ஈழத்தமிழர்களின் தனித்துவமான வாழ்வியற்சூழல், வரலாறு, தொன்மை, என்பவதுவும் சரியாக எதிரிகளுக்கும் அறிவுரீதியாக நிறுவி விளக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எம்மிடையில் வந்துபோவதுண்டு.
அறவழியில் சைவத்தையும் தமிழையும் ஒழுகி இளந்தமிழச் செல்வங்களுக்கு சீர்திருத்தத்துடன் சைவநெறியை வாழத்தக்க வகையில் வழங்க வேண்டும் எனும் நோக்கில் பயணிக்கும் சைவநெறிக்கூடத்தின் முன் மேலாலன பணியும் ஒரு கிiளாயாக வந்தமைந்துள்ளது.

மூவின மக்கள் வாழும் இலங்கைத்தீவில் நான் சமயங்கள் வாழப்படுகின்றன. ஒருவரை ஒருவர் புரியவும், அல்லது தத்தமது பண்பாட்டு வாழ்வியலை ஒருவருக்கொருவர் நெருங்கியும் தோழமையுடவ் வாழும் சூழல் சவாலாகவே உள்ளது.

உள்ள பிரச்சனைகள் அப்டியே இருக்க புரிதலை மாய மந்திரமாக திருவிறக்க முடியாது என்பதையும் சைவநெறிக்கூடமாகிய நாம் அறிவோம்.

palsamayavila-2 palsamayavila-3 palsamayavila-4 palsamayavila-5

அதேநேரம் உண்மையான நம்பிக்கையுடன் ஈழத்தமிழர் வாழ்வியலை பிற இனத்தவர்களுக்கு இங்கு புலத்தில் புலப்படுத்துவதுபோல் தாயகத்திலும் தமிழர் வாழ்வியலை ஏனைய பல்லின சமயமக்களுக்கு விளக்கவும், பல்சமயங்களின் பங்களிப்பால் முடிளவு முரண்பாடுகளைத் நீக்கவும் இலங்கையிலும் ஒரு பல்சமய இல்லம் பயன்படும் எனும் பொதுநோக்கில் தை 20017 முதல் ஒரு திட்டம் சைவநெறிக்கூடத்தினதும், பல்சமய இல்லத்தில் பங்களாராக இருக்கும் பௌத்த சமயத்தவர்களது கூட்டு முயற்சியிலும் தொடங்கப்பெற்றது. இலங்கை இசுலாமியர்கள், கிறிஸ்தவர்களும் இத்திட்டத்தில் உறுப்பினராக இணைந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக 09. 12. 2017 சனிக்கிழமை மாலை 16.00 மணிமுதல் பேர்ன் பல்சமய இல்லத்தில் 2வது பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பேர்ன் நகரில் அமைந்துள்ள பல்மீரா அமைப்பும் இத்திட்டதிற்கு தனது பங்களிப்பினையும் ஆற்றுகிறது.
புத்தளத்தில் பல்சமய இல்லம் அமைப்பதற்கு இடம் கிடைத்துள்ளது. அடுத்த கட்டமாக அங்கி நான்கு சமயத்தவர்களது வழிபாட்டுத் தலங்களும் அத்துடன் பல்லினமக்களும் கூடும் திடலும் அமையவுள்ளது.
அனைத்தையும் வெளிப்படையாகப் பேசவும், நிபந்தனைகள் அற்றும் விரோதம் அற்றும் தமது நிலைப்பாட்டை விளக்கவும், பொறுப்புணர்வுடன் அனைத்தையும் செவிமடிக்கும் பண்பினை அனைவருக்கும் கற்றுக்கொடுக்கும் நடுவமாகவும் இது விளங்க வாய்ப்புள்ளதாக திருநிறை சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்களும், பௌத்த துறவி திருநிறை. பண்டே அவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.

சுவிசில் பல்சமய இல்லத்திற்கு உள்ள சாவால்களைவிட இலங்கையில் வேறுவகைய சவால் இருப்பதை தாம்
அறிவார்கள் என்றும், அதேநேரம் பிரச்சனைகளுக்கு இது தீர்வினை உடன் தராது விட்டாலும் உண்மையுடன் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள நல்ல நடுவமாக விளங்கும் என்றும் இன்றைய சந்திப்பில் உறுதிகொணட்டனர்.

சுவிற்சர்லாந்து பல்சமய இல்லத்தின் மதியுரையுடன், பல்மீரா அமைப்பின் அனுசரணையுடன், சைவநெறிக்கூடம், பல்சமய இல்லத்தின் பௌத்த மன்றம் ஆகிய இணைந்து தொடங்கிய இத்திட்டத்தில் சைவநெறிக்கூடம் ‘உளவியல் சொற்களும், ஆன்மீக சிந்தனை மட்டும் பிரச்சனைகளுக்குத் தீர்வினைத் தராது, அதேநேரம் மனித முயற்சி கைவிடல் ஆகாது’ எனும் அனுபவத்துடன் பயணிப்பதாக இக்கூட்டத்தில் பங்கெடுத்த தமிழர் ஒருவர் கருத்துடன், விரும்புவோர் இக்கூட்டு முயற்சியில் உறுப்பினராகாலம் என பொது அழைப்பு யாவருக்கும் விடுக்கப்பட்டு கூட்டம் 18.30 மணிக்கு நிறைவடைந்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit